ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் "அகம்பாவம்.'

இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார்.

Advertisment

திருமணத்திற்குப்பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும், மீண்டும் நடிக்கும்போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தவருக்கு ஸ்ரீமகேஷ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஓகே சொன்னவர் அதற்காக பத்து கிலோவுக்கு மேலும் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

namitha

அவருடன் கொடூரமான வில்லனாக மிரட்ட இருக்கிறார் வாராகி. தான் தயாரிக்கும் படத்தில் பலர் கதாநாயகனாகவே விரும்புவர்.

Advertisment

ஆனால் வாராகி கதையின் முக்கியத்துவத்தைத் தூக்கி நமீதாவின் தோளில் வைத்துவிட்டு அதன் பிரம்மாதமான கதாபாத்திரமான வில்லன் ரோலை ஏற்றுள்ளார். "இமைக்கா நொடிகள்' படத்தில் அனுராக் கஷ்யப்பைக் கழித்துவிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி "அகம்பாவ'த்தில் வாராகி ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரமும் இருக்கும்.

இவர்களுடன், ராதாரவி, மனோபாலா, மாரிமுத்து, அப்புக் குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

"கோலிலிசோடா', "சண்டிவீரன்' படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப் படத்திற்கு இசைய மைக்கிறார்.

Advertisment

ஒளிப்பதிவு- ஜெகதீஷ் வி.விஸ்வம், ஸ்டண்ட்- இந்தியன் பாஸ்கர், நடனம்- ராபர்ட், படத்தொகுப்பு- சின்னு சதீஷ், கதை மற்றும் தயாரிப்பு- வாராகி, இணை தயாரிப்பு சுஜிதா செல்வராஜ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் "சத்ரபதி' ஸ்ரீமகேஷ்.

இவர் சரத்குமார் நடித்த "சத்ரபதி' என்கிற வெற்றிப் படத்தை இயக்கியவர்.

namitha

வாராகி தன் நிஜ வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான நிகழ்வுகளைக் கதையாக்கியிருக்கிறார். அதற்கு தனது வலிலிமையான வசனங்கள், திரைக்கதை யுக்தியின்மூலம் உயிர்கொடுத்துள்ளார் ஸ்ரீமகேஷ். கடந்த 19-ஆம் தேதி ஏ.ஆர்.எஸ். கார்டனில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்கு முன்பாக (நவ. 10) நலிந்த திரைக்கலைஞர்களுக்கு வாராகி அம்மன் அலுவலகத்தில் ராதாரவியும் ஜே.கே. ரித்தீஷும் இணைந்து நலத் திட்ட உதவிகள் வழங்கினர்.